Header Ads

test

இலங்கை கடற்படைக்கு அமெரிக்க கப்பல்!


அமெரிக்க கரையோர பாதுகாப்புப் படைப்பிரிவின் முன்னர் பயன்படுத்தப்பட்ட 'ஹை என்டியூரன்ஸ் கட்டர்' கப்பல் ஓகஸ்ட் 27ஆம் திகதி இலங்கை கடற்படைக்கு அமெரிக்காவினால் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இறுதி யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளிற்கு கடல்வழி ஆயுதங்கள் எடுத்துவரப்படுவதை தடுப்பதற்கு குறித்த கப்பலே வேவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

இந்த தகவல்கள் அடிப்படையில் இலங்கை விமானப்படையினால் தாக்குதல் நடத்தப்பட்டு கப்பல்கள் பல மூழ்கடிக்கப்பட்டிருந்தது.

தற்போது குறித்த கப்பலை அமெரிக்க அரசு இலங்கை கடற்படையிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.

No comments