Header Ads

test

மாமனாரின் கத்திக் குத்துக்கு இலக்காகி மருமகள் பலி!

பூ வெட்டும் கத்தியில், தன்னுடைய மருமகளை அவருடைய மாமனார் குத்திக்கொன்ற சம்பவமொன்று, பசறையில் இடம்பெற்றுள்ளது.

பசறை, மீரியபெத்த வெலிபிம்சே எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், திலுகா தமயந்தி (வயது 40) என்பவரே பலியாகியுள்ளார்.

திலுகா தமயந்தின் கணவன், இன்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர், தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார்.

அதன்பின்னர் மேற்படி பெண், ​மாமி மற்றும் மாமாவுடன், அவர்களின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், மாமிக்கும் மருமகளுக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில், காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்போதெல்லாம், இவ்விருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து, காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர்.

எனினும், சண்டையின் போது, மாமியை பிடித்திழுத்த மருகளை, வீட்டின் கதவு நிலையில், மாமியை மோதித்தாக்கியுள்ளார். இதனால், மாமியின் நெஞ்சுப்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதனையத்து வைத்தியசாலையில் மாமி அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னரே, மாமாவுக்கும் மருமகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே, வீட்டிலிருந்த பூவெட்டும் கத்தியை எடுத்து, மருமகளின் கழுத்தை மாமனார் வெட்டி, படுகொலைச்செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், சந்தேகநபரான 65 வயதான மாமனார் கைதுசெய்யப்பட்டுள்ளார் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினர் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

No comments