Header Ads

test

கடும் காற்றினால் யாழில் பாதிப்பு


நாட்டின் பல மாவட்டங்களிலும் சீரற்ற காலநிலை நிலவுவதாக அனர்த்தமுகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் காரைநகர் பிரதேசத்தில் நேற்று முன்தினம் வீசிய வலுவான காற்றினால் 17 குடும்பங்களை சேர்ந்த 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் நேற்று வீசிய கடும்காற்றினால் நல்லூர் பகுதியில் 1 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஒரு குடும்பத்தை சேர்ந்த 2பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கோப்பாய் பகுதியில் கடும் காற்றினால் நேற்று முன்தினம் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை யாழ் குடாநாட்டின் பல இடங்களில் விவசாயிகளின் வாழை மரங்கள் முற்றாக முறிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments