நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
95 ஒக்டைன் பெற்றோல் 2 ஆல் அதிகரிக்கப்படுவதுடன், சுப்பர் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 129 ரூபாவில் இருந்து 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 92 ஒக்டைன் பெற்றோல் விலையில் மாற்றங்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
Post a Comment