மண் வியாபாரம்: காவல்துறை - அதிரடிப்படை மோதல்!
கிளிநொச்சி பகுதியில் மணல் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை காவல்துறைக்கும் அதிரடிப்படைக்கும் முறுகல்உச்சமடைந்துள்ளது.
அவ்வகையில் பரந்தன் பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றின் சாரதியை, மக்கள் மத்தியில் வைத்து சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் தாக்கியுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றிரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முலைதீவு பரந்தன் ஏ35 வீதியால் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றை பின்தொடர்ந்து வந்த விசேட அதிரடிப்படையினர் கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் வைத்து டிப்பர் வாகனத்தை மடக்கிப் பிடித்து சாரதியை தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் காணப்பட்டதால், அங்கு ஒன்று கூடிய மக்களினால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
காவல்துறை அதிகாரிகளது ஆசீர்வாதத்துடன் இரவிரவாக நடைபெறும் மண் கடத்தல் விவகாரத்தை ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்த நிலையில் தற்போது அது மோதலாக வெடித்துள்ளது.
Post a Comment