தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகிறனர் - உதய கம்மன்பில
வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாத அரசியல் தீர்வு தொடர்பில் பிரசாரம் செய்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் தீர்வு விடயத்திற்கு மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் நாட்டில் உள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர் கட்சி தலைவர் என்ற விடயத்தை ஒரு போதும் உறுதிப்படுத்தியதில்லை.
வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து நிறைவேறாக அரசியல் தீர்வு தொடர்பில் குறிப்பிட்டு தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க பொது எதிரணி பூரண ஒத்துழைப்பு வழங்கும் அரசியல்தீர்வு தான் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திபடுத்தும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment