Header Ads

test

சுமந்திரன்,சுகிர்தன் மீனவர்களை அச்சுறுத்துகின்றனர்?

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறலிற்கு எதிரான போராட்டங்கள்முடங்கிப்போயுள்ளமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோரே காரணமென தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றில் தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தும் அதனால் போராட்டங்களை நடத்தினால் சிறையிலடைபடவேண்டுமென மிரட்டிவருவதால் மீனவர்கள் முடங்கியிருப்பதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் முரளி தெரிவித்தார்.

வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேற்று யாழ்.ஊடக அமையத் தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தென்னிலங்கை மீனவர்கள் வடமாகாணத்தில் தங்கி யிருக்கும் இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் நல்லிணக்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது. மேலும் நிரந்தரமாக தங்கும் மீனவர்களுக்கு கட ற்படையினரும், பொலிஸாரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் சட்டத்திற்கு மாறான தொழில்களை தடுத்து நிறுத்த இயலாத நிலைமை காணப்படுகின்றது.

குறிப்பாக வடமராட்சி கிழக்கில் எமது படகுகள் தீக்கிரையாக்கப்பட்ட போது எவரும் குரல் தரவில்லை.தற்போது முல்லைத்தீவு நாயாறு பகுதியில் மீனவர்களுக்கு பிரச்சினை என்றால் மற்றைய மீனவர்கள் குரல் கொடுப்பதாக இல்லை. ஆனால் குரல் கொடுக்கவேண்டுமெனவும் முரளி கேட்டுக்கொண்டார். 

No comments