Header Ads

test

எம்.பிகள் சம்பள அதிகரிப்பிற்கு மைத்திரி எதிர்ப்பு


சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு தான் அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளங்களை அதிகரிக்கும் யோசனை ஒன்று அண்மையில் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

No comments