அனந்தியின் பிஸ்ரல்:அவை தலைவர் மௌனமாம்!
தமிழ்த்தேசியம் பேசும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தியிடம் கைத்துப்பாக்கியுள்ளதாவென்பது தொடர்பில் பதிலளிக்க அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மறுத்துள்ளாராம்.அனந்தி சாவகச்சேரி காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் வாக்குமூலமொன்றை பதிவு செய்ய காவல்துறை அவைத்தலைவரை தேடி வந்திருந்ததாகவும் தனக்குள்ள சிறப்புரிமையை சுட்டிக்காட்டி சீ.வீ.கே தான் வாக்குமூலமொன்றை வழங்கவில்லையெனவும் தனது ஆதரவாளர்களிற்கு தொலைபேசி மூலம் அவை தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அனந்தி கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் குற்றஞ்சாட்டியிருந்தார்.அதனை சபையில் பேசவைத்து ஊடகங்களில் செய்தியாக்க அவைத்தலைவர் விரும்பியிருந்ததாக அனந்தி தெரிவித்துள்ளார்.
தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அனுமதியை பெற்றிருப்பதாக அஸ்மின் தெரிவிக்க அதனை ஊடகங்கள் கொண்டாடவேண்டுமென அவைத்தலைவர் விரும்பியிருந்தார்.தனது இலக்கு எய்தப்பட்டதும் அவை தலைவர் இனி அது பற்றி பேசவேண்டாமென கைவிடுவதாகவும் அனந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Post a Comment