மட்டக்களப்பில் தப்பியோடிய சிறைக் கைதிகள்!
மட்டக்களப்பு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படும் போது தப்பி சென்ற கைதிகள் இருவரில் ஒருவர் ஒரு சில மணி நேரத்தில் சிறை அதிகாரிகளினால் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார். மற்றையவரை தேடும்பணி தொடர்கின்றது.
போதை வஸ்த்து மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து இருவரும் வாழைச்சேனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்
மீண்டும் நேற்று வியாழக்கிழமை குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த வேளை அவர்கள் மீதான விளக்கமறியல் காலத்தை இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
நீதிமன்றம் கலைந்த பின்பு கைதிகளை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற தயாரானபோது குறித்த இரு கைதிகளும் தங்கள் கைவிலங்கினை அகற்றிவிட்டு இரு வேறு திசைகளில் தப்பி ஓடியுள்ளனர்.
வாழைச்சேனை காவல்துறையினரின் தகவல்களின்படி தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் அந்தப்பகுதியில் வீடு ஒன்றில் மறைந்திருந்த வேளை ஓரிரு மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர் தேடப்பட்டு வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment