மட்டு – அம்பாறையில் மயக்கமருந்து கொடுத்து திருடும் திருட்டுக்கள் அதிகரிப்பு
மட்டக்களப்பு – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தனிமையில் இருக்கும் நபர்கள், தனிமையில் பயணம் செய்வோர்களை இலக்குவைத்து மயக்கமருந்து கொடுத்து திருடும் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் நிலவுகின்றது.
சமீபகாலமாக ஆட்களை மயக்கிவிட்டு அவர்களது உடமைகளை திடுடிவிட்டு தப்பிச்செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுயில் இருந்து ஓந்தாட்சிமடம் நோக்கிப்பயணம் செய்த முச்சக்கரவண்டி சாரதியை வழிமறித்த மூன்று நபர்கள் பஸ்சுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் இன்னும் பஸ்வரவில்லையெனவும் நேரம் போவதாகவும் கல்முனைக்குச் செல்லவுள்ளதாகவும் தங்களை அங்கு கொண்டுவிடுமாறு கேட்டுள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டி சாரதியும் அந் நபர்களை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளார். முச்சக்கரவண்டி ஓந்தாட்சிமடத்தை நெருங்கும் போது இடையில் முச்சக்கரவண்டியை நிறுத்தியவர்கள் வீதியோரத்தில் விற்பனை செய்யப்படும் இளநீர் வாங்கிகுடித்துள்ளனர். அத்துடன் ஆட்டோ சாரதிக்கும் இளநீர் கொடுத்துள்ளனர். அவ் இளநீரைக்குடித்த சாரதி இதனால் சில நிமிடங்களில் மயக்கங்களுக்குள்ளாகியுள்ளார். அதன் பின் சாரதி அணிந்திருந்த ஐந்துபவுண் தங்கமாலை மற்றும் பணம் என்பவற்றை திருடிச்சென்றுள்ளனர். முச்சக்கரவண்டியில் மயக்கநிலையில் கிடந்தவரை பொதுமக்கள் மீட்டுள்ளனர். இவர் திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுள்ளார்.
இதேபோல கடந்த சனிக்கிழமை காத்தான்குடியிலும் தனிமையில் இருந்த கடை உரிமையாளர் ஒருவரை குளிர்பானத்தில் மயக்கமமருந்து கலந்து கொடுத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆலையடிவேம்பு, கல்முனை ஆகிய இடங்களிலும் வங்கி, சந்தைக்குச் சென்று திரும்பிய பெண்களை மயக்கி அவர்களிடமிருந்த நகை, பணம் என்பன திருடப்பட்டிருந்தன.
இவ்வாறான மயக்கமருந்து தெளித்து திருட்டில் ஈடுபடும் நபர்களினால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது. தெரியாத நபர்கள் மறறும் உடன் அறிமுகமாகிக்கொள்பவர்கள் குடிப்பதற்க்கு ஏதாவது கொடுத்தால் அதனை வாங்கிபருகவேண்டாம் எனவும் சந்தேகம் இருந்தால் விலகி நடக்குமாறும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

Post a Comment