யாருக்கும் அடிபணிய மாட்டாராம் மைத்திரி
நாட்டைப் பிளவுபடுத்தவோ, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியவோ கூட்டு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மன்னம்பிட்டியவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
“அனைத்துலக அழுத்தங்களில் இருந்து போர் வீரர்களை இந்த அரசாங்கம் தான் விடுவித்திருக்கிறது.
சில அரசியல்வாதிகள், லிப்டன் சதுக்கத்தில் நின்று கொண்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாது, போர் வீரர்களை பாதுகாக்க வேண்டும் என்று காலம் கடந்த முழக்கங்களை எழுப்பி தமது அரசியல் நோக்கங்களை அடைய முனைகின்றனர்.
அரசாங்கத்துக்கு எதிரான இந்த முழக்கங்கள் இப்போது காலாவதியாகி விட்டவை.
மின்சார நாற்காலி, அனைத்துலக நீதிமன்றங்கள், வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய அச்சங்களுக்கு இந்த அரசாங்கம் ஓய்வு கொடுத்து விட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment