Header Ads

test

நேவி சம்பத் கைது ?

கொழும்பில் 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பிலும் மற்றும் நாடாளுமன்ற உறப்பினர் ரவிராஸ் கொலைச் சம்பவம் தொடர்பிலும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியிருந்தனர்.

இந்நிலையில் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments