மகளிர் விவகார அமைச்சரால் கால் நடை வளர்ப்புக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் ஆடு, மாடு வளர்ப்பிற்கான உதவு தொகை மற்றும் கோழி வளர்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வடமாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி (ஊடீபு) ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பளை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 07 குடும்பங்களுக்கே இவ்வாறு கால் நடை வளர்ப்புக்கான வாழ்வாதார உதவிகளை 03.08.2018ம் திகதி வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால்; குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Post a Comment