Header Ads

test

வாள்வெட்டுக் குழுக்கள் வட்சப், வைபர் பாவிப்பதால் பிடிக்க முடியவில்லையாம்


யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டில் ஈடுபடும் ஆவா குழு உள்ளிட்ட சகல வாள்வெட்டு குழுக்களும் வட்ஸ்அப், ஜ.எம்.ஓ உள்ளிட்ட ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் குறித்த தொடர்பாடல் ஊடகங்களை பயன்படுத்துவதனால் அவற்றை பய ன்படுத்துபவர்களை ஒட்டுகேட்க கூடிய வசதி எம்மிடம் இல்லை இதனால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை என யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் பொலிஸார் கூறியுள்ளார்கள்.

இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கூட்டத்தில், மேலும் பொலிஸார் கூறுகையில், ஆவா உள்ளிட்ட வாள்வெட்டில் ஈடுபட்ட முக்கிய மானவர்களை நாம் கைது செய்தோம். ஆனால் அவர்கள் 5 அல்லது 6 மாதங்களில் வெளியே வந்து விடுகிறார்கள். அது எங்கள் கைகளில் இல்லை. அதேசமயம் வெளியில் வரும் அவர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும் வாள்வெட்டில் ஈடுபடுகிறவர்கள் வட்ஸ்அப், வைபர், ஜ.எம்.ஓ உள்ளிட்ட தொடர்பாடல் ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். இவற்றை ஒட்டுக்கேட்கும் வசதியோ, அவ தானிக்கும் வசதியோ எங்களிடம் இல்லை என பொலிஸார் மேலும் கூறியுள்ளார்கள்.

No comments