Header Ads

test

யாழில் மருத்துவரின் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த குழு!

யாழ். கொக்குவில் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தியுள்ளது என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் கொக்குவில் சம்பியன் லேனில் இடம்பெற்றுள்ளது. என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார் என்பரே யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மூன்று உந்துருளிகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டது. வந்தவர்களின் கைகளில் பொல்லுகள் உள்பட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டன. வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உள்பட்ட வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்துவிட்டு கும்பல் தப்பித்தது. எனினும் வீட்டிலிருந்த எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

No comments