காணாமல் போனோர் அலுவலக இடைக்கால அறிக்கை
காணாமல் போனோர் அலுவலகம், இம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் வெளியிடவுள்ளது.
வலிந்து காணாமல் செய்யப்படுதலுக்கெதிரான சர்வதேச தினம், ஓகஸ்ட் 30 ஆம் திகதியாகும். அந்த தினத்துடன் சேர்ந்து வரும் வகையில் இடைக்கால அறிக்கை வெளிவருகின்றது என அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.
வலிந்து காணாமல் செய்யப்படுதலுக்கெதிரான சர்வதேச தினம், காணாமல் போனோர் அலுவலகத்தால் ஓகஸ்ட் 30 ஆம் திகதியன்று மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரை, கொழும்பு-07 ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மையத்தில் நினைவு கூரப்படும்.
ஜனாதிபதி வழக்குரைஞர் சாலிய பீரிஸினால் தலைமை தாங்கப்படும் காணாமல் போனோர் அலுவலகம், காணாமல் போனோர் மற்றும் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான பல பிரச்சினைகளை தொடர்பிலேயே, தன்னுடைய இடைக்கால அறிக்கையில் அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை செய்யும். காணாமல் போனோர் அலுவலகம், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறுவப்பட்டது. வடக்கு - கிழக்கிலுள்ள காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் குடும்பங்களை சந்தித்து வருகின்றது.
Post a Comment