மீனவ அமைப்பு தலைவர்களை உள்ளே தள்ள சதி!
முல்லைத்தீவு கடலில் தென்னிலங்கை மீனவர்களால் முன்னெடுக்கப்படும் தடைசெய்யப்பட்ட கடற்தொழில்நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரி மீனவ அமைப்புக்களது முற்றுகைப்போராட்டம் தொடர்கின்ற நிலையில் முக்கிய செயற்பாட்டாளர்களை கைது செய்து உள்ளே தள்ள இலங்கை காவல்துறை மும்முரமாகியுள்ளது.
நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கடற்றொழில் திணைக்களம் மீது முன்னெடுக்கப்பட்ட முற்றுகைப்போராட்டத்தினை தொடர்ந்து காவல்துறை போராட்டகாரர்களின் மீது தடியடி நடத்தி கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்தது.அதத்துடன் அலுவலகத்தின் பொருட்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று தடயவியல் காவல்துறையினரை பயன்படுத்தி சேதமாக்கப்பட்ட அலுவலக பொருட்களில் கைவிரல் தடயங்கள் திரட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக அலுவலத்தின் கண்ணாடிகள் முற்றுமுழுதாக சேதமாக்கப்பட்டுள்ளதால் மழை பெய்தமையினால் கணிணிகளில் நனைந்துள்ளன. அத்துடன் வளாகத்தின் முன்பக்க வேலி முற்றாக பிய்த்தெறியப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று 2ம் நாளாக தொடரும் முற்றுகைப்போராட்டத்தினை கடற்தொழிலாளர்கள் வீதியில் கொட்டகை அமைத்து மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மீனவ அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
ஏதிர்வரும் 8ம் திகதி இலங்கை கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பில் எய்தப்படவுள்ள முடிவிற்காக மீனவ அமைப்புக்கள் காத்திருக்கின்றன.
இதேவேளை குறித்த போராட்டத்தில் அரச சொத்து தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர்; தகவல் திரட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் தாக்குதலுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதுடன் அரச சொத்துக்களை சேதப்படுத்தியவர்;களென செயற்பாட்டாளர்களை உள்ளே தள்ளும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment