கைதி உடைக்கு மாறியது காவி உடை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைக் கைதிகள் அணியும் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஞானசார தேரர் தற்போது சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் 5 ஆவது இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு ஒரு சிறை அதிகாரியும், இரண்டு சிறைக்காவலர்களும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஞானசார தேரருக்கு சிறைக் கைதிகள் அணியும் ஆடையை சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
சிறைக்கைதிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அணியும், காற்சட்டை மற்றும் மேலங்கியே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் சிறைச்சாலை உடைகளை அணிய வேண்டியது கட்டாயமாகும்.
Post a Comment