கோத்தாவிடம் சராவின் முகவர்?
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஒருபுறம் தனது பேரங்களை ஆரம்பித்துள்ள நிலையில் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இன்னொரு புறம் முகவர்களை களமிறக்கியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளராக இருந்த சிவராசாவினை கோத்தபாயவிடம் சரவணபவன் களமிறக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
கோத்தபாய அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளர் ஒருவரை தனக்கு நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின், சிறிலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் மிலிந்த ராஜபக்சவே, கோத்தாபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
“மிலிந்த ராஜபக்சவை எனது அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நிமித்துள்ளேன். அவர் ஊடகம் மற்றும் தொடர்பாடலில் தகைமை பெற்றவர். இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஆழமான அனுபவம் கொண்டவர். தற்போது அவர், சிறிலங்கா பொதுஜன முன்னணியின், கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருக்கிறார்” என்று கோத்தாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சரவணபவன் கோத்தாவின் தமிழ் ஊடகப்பிரிவிற்கு தனது ஆள் ஒருவரை தற்போதே நியமித்து வைக்க விருப்பங்கொண்டுள்ளார்.அவ்வகையில் முன்னர் மஹிந்தவுடன் தொடர்புகளை பேணிய சிவராசாவை கோத்தாவிடம் களமிறக்கியிருப்பதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment