Header Ads

test

சபை அமர்வுகளில் மேசைக்குக் கீழ் படுத்திருக்கும் சயந்தன்


வடக்கு மாகாணசபையின் அமர்வுகளின்போது உறுப்பினர் சயந்தன் தொடர்ச்சியா மேசைக்குக் கீழே சென்று யாருடனோ தொலைபேசியில் உரையாடிவிட்டு எழுந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

வடக்கு மாகாண சபையில் அமைச்சர் டெனீஸ்வரனின் வழக்கின் இடைக்கால தீர்ப்பையடுத்து சபையில் தொடர்ச்சியாக குழப்பம் நிலவிவருகின்றது. சபையினை குறித்த விவகாரத்திற்குள்ளேயே தொடர்ந்து வைத்திருப்பதிலும் ஒவ்வொரு அமர்விலும் குழப்பங்களை உருவாக்குவதிலும் வடக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் தவராசா, உறுப்பினர் கேசவன் சயந்தன் உள்ளிட்டவர்கள் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் அண்மைய அமர்வுகளில் சயந்தன் மேசைக்கு கீழே படுத்திருந்து யாருடனோ தொலைபேசியில் உரையாடிவிட்டு பின்னர் எழுந்துநின்று சபையை குழப்பும் விதமாக ஏதாவது கருத்துக்கூறி அமர்வதை அவதானிக்க முடிந்தது.

No comments