சிங்கள குடியேற்றம் :இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு முரண்!
இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு முரணானாக வடக்கு, கிழக்கில் குறிப்பாக, முல்லைத்தீவில்; பெரும்பான்மையினரின் குடியேற்றங்கள், சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இராணுவப் பாதுகாப்புடனேயே, பெரும்பான்மையினரின் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று குற்றஞ்சாட்டியதோடு, மகாவலி நீரே வரமுடியாத பிரதேசங்கள் கூட, மகாவலி அபிவிருத்திச் சபைக்கு உள்ளிட்ட காணிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மையின மீனவர்களை, அங்கு தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கான அரச உதவிகளும் இராணுவ ஆதரவுகளும் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கான குடியிருப்புக் காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்களின் இருப்பைக் காப்பாற்றுவதற்காக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினூடாக வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதை ஞாபகமூட்டிய அவர், ஆனால், இன்று பெரும்பான்மையினரின் குடியேற்றத்தினூடாக, வடக்கு - கிழக்கு நிலத்தொடர்பு துண்டிக்கப்படுவதாகவும், இவ்விடயம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானதெனவும் அவர்; குறிப்பிடப்பட்டுள்ளார்
Post a Comment