Header Ads

test

வெடுக்குநாறிமலை:மக்கள் போராட்ட களத்தில்!


வெடுக்குநாறிமலையினை சுவீகரிக்க சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

தமிழரின் பூர்வீக கன்னியா வெந்நீர் ஊற்றை தாரைவார்த்துக் கொடுத்ததைப் போல் எமது வன்னியின் அடையாளத்தை , எமது வடக்கின் அடையாளத்தை தொல்பொருள் திணைக்களத்திடம் தாரைவார்க்க நாம் என்றும் தயாரில்லை. வெடுக்குநாறி மலையும் ஆதிலிங்கேஸ்வரரும் எமது அடையாளம், எமது தமிழ் மக்களின் அடையாளம். எமது அடையாளத்தையும் எமது பாரம்பரியத்தையும் பாதுகாக்க, ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.08.2018) காலை 9.00 க்கு வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன் கட்சி பேதமின்றி தமிழராய் ஒன்றிணைந்து எமது எதிர்ப்பைக் காட்டுவோமென போராட்ட குழு அழைப்பினை விடுத்துள்ளது.

No comments