சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி திருமலையில் சந்திக்கிறார்?
இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், காவற்துறை மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோநெட்டா சொமருகா திருமலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களை சந்தித்துக்கவுள்ளார்.
இதனிடையே கொழும்பில் அவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது நாட்டின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு விருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கையின் உள்துறை அமைச்சருடனான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றையும் அவர் ஏற்படுத்திக் கொண்டதாக தெரியவருகின்றது.
இரண்டு வருடங்களிற்கு முன்னராக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அவர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களை சந்தித்திருந்தார்.
இந்நிலையில் 500 நாட்கள் தாண்டி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்ட களத்திற்கு பயணித்து அவர் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார்.
ஆயினும் சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், காவற்துறை மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோநெட்டா சொமருகா வடக்கிற்கு வருகை தரமாட்டாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment