ஜனவரியில் வடமாகாணசபை தேர்தல்?
வடமாகாணசபையின் எல்லை வரம்பு அறிக்கையை நாடாளுமன்றம் இந்த மாதம் அங்கீகரித்தால், அதற்கான தேர்தலை எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் நடத்த முடியும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொகுதிகள் தொடர்பான எல்லை வரம்பு அறிக்கை எதிர்வரும் 24ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்த நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதேவேளை, நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தையும், எல்லை வரம்பு அறிக்கையையும் நாடாளுமன்றம் அங்கீகரித்தால் மாத்திரமே, அடுத்த ஆண்டு ஜனவரியில் வடமாகாண சபையுள்ளிட்ட ஆறு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்
Post a Comment