முல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்!
தமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் இன்று அனுபவித்துள்ளனர்.குறித்த அலுவலகத்தினுள்; ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பெரும் பதற்றம் ஏற்படடிருந்தது.
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தென்னிலங்கை சிங்கள மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி ஆ;ரப்;பாட்டமொன்றை மேற்கொண்ட மீனவர்கள் பதிலளிக்க மறுத்த நீரியல் வள திணைக்களத்துக்குள் புகுந்து கொண்டனர்.
இதனையடுத்து சிறீலங்கா காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் குவிக்கப்பட்டனர்.காவல்துறையினரும் போராட்டகாரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடியதுடன் மேலதிக காவல்துறையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே போராட்டகாரர்களில் சிலர் நீரியல் வள திணைக்களம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.
இதனிடையே மத்தளன் பகுதியிலும் மீன்பிடி சட்டங்களை அமுல்படுத்த கோரி மற்றொரு போராட்டம் மீனவ அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முல்லைதீவு முதல் மணலாறின் முகத்துவாரம் வரையிலான கடற்கரைகளை தாரைவார்த்து வருமானம் பார்ப்பதில் முன்னணியில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளே முன்னின்றிருந்தனர்.அவர்களிற்கு எதிரான மக்கள் போராட்டம் இம்முறை சீறிப்புறப்பட்டுள்ளதுடன் முக்கிய செய்தியொன்றையும் தாயகம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment