அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன கைது?
கொழும்பில் தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதானியுள்ள நேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவர் தப்பிக்க உதவிய முன்னாள் கடற்படை தளபதி கைதாகவுள்ளார்.
நேவி சம்பத் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி, அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரணிலின் ஆதரவாளரான கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன ஓய்வின் பின்னராக பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment