பட்டதாரிகளுக்கு துரிதகதியில் வேலைவாய்ப்பு !
வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெற்றுவருவதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்; மாநாடு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது
வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு எப்போது வழங்கப்படும் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் கனகஹேரத் நேற்று பாராளுமன்றத்தில் பட்டதாரிகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார பதிலளித்தார்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு நான்கு கட்டங்களின் கீழ், தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
கட்சி பேதங்கள் இன்றி, ஆட்சேர்ப்பு இடம்பெறும். முதல் இரண்டு கட்டங்களில் 20 ஆயிரம் பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment