அழிவுறும் காரைநகர் வெளிச்சவீடு!
யாழ்ப்பாணத்தின் தீவகங்களுள் ஒன்றான காரைநகரில் அமைந்துள்ள வரலாற்று சின்னங்களுள் ஒன்றான வெளிச்சவீடு பராமரிப்பு இன்றி அழிவடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.காரைநகரிலுள்ள 102 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவளம் வெளிச்சவீடே தற்போது அழிவடைந்து வருகின்றதென சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிடுள்ளனர்.
வெளிச்ச வீட்டின் மேல்பகுதியில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் உள்ளே மரங்களும் வளர்ந்து வருகின்றன. கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டுள்ள காரைநகர் பிரதேச சபை இவ்விடயத்தில் அக்கறையற்றிருப்பதாக சொல்லப்படுகின்றது.
தீவகப்பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களிற்கான முக்கிய அடையாமாக கரையிலுள்ள குறித்த வெளிச்சவீடு அமைந்துள்ள போதும் அது செயற்படாது கைவிடப்பட்டுள்ளது.
வடமராட்சி பருத்தித்துறையிலுள்ள வெளிச்ச வீடு தற்போதும் இராணுவ வசமேயிருந்துவருகின்றது.மீனவர்களின் நலன்கருதி அதனை மீள இயக்க ஏதுவாக விடுவிக்கவேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.
இலங்கை கடற்படையினரின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகியுள்ளதுடன் பாரிய கடற்படை தளத்தையும் காரைநகரே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment