மருதங்கேணி கஞ்சா கடத்தலின் மையம்?
வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் ஊடாகவே கஞ்சா இலங்கைக்குள் கடத்தப்படுவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் முரளி தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி கடல்பகுதி தற்போது கடல்வழி கஞ்சா கடத்தப்படுகின்றது. அவ்வாறு கடத்தப்படும் கஞ்சாவை தெற்கிற்கு எடுத்துச்செல்வது அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களது வாகனங்களேயென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடமராட்சி கிழக்கில் உள்ளுர் மீனவர்களது படகுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் இன்னொரு பக்கமாக எமது மீனவர்களை கடலில் நடமாட விடாது முடக்கும் உத்தியும் உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே வடமராட்சி பருத்தித்துறை துறைமுகப்பகுதி தற்போது தென்னிலங்கை மீனவர்களால் இத்தகைய கடத்தல் நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தப்படுகின்றதென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இத்தகைய கடத்தல்களின் பின்னணியில் கடற்படையிருப்பதாக கூறப்படுகின்றது.முழத்துக்கொரு காவலரண் அமைத்து கடற்படை நிலைகொண்டுள்ள நிலையில் எவ்வாறு கடற்படைக்கு கஞ்சா கடத்தல்காரர்களை பற்றி தெரியாதுள்ளதெனவும் முரளி கேள்வியுள்ளார்.
Post a Comment