வெளியேறினர் ஒரு பகுதி சிங்கள மீனவர்?
முல்லைத்தீவு நாயாறு இறங்குதுறை பகுதியில் தங்கியிருந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் ஒரு பகுதியினர் இன்று மாலை அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.அவ்வாறு வெளியேறி மீனவர்களிற்னு அதியுச்ச இலங்கை காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையிலேயே வெளியேறி சென்றுள்ளார்கள்.
நாயாறு இறங்குதுறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 8 வாடிகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் கடந்த 13ம் திகதி திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இதயைடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்ததுடன் தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேற்றப்படவேண்டுமென உள்ளுர் மீனவர்கள் கோரியும் வந்திருந்தனர்.
நாயாற்றிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றப்படவேண்டும் மற்றும் கொழுத்தப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படவேண்டும். இது நிறைவேற்றப்படும்வரை பட்டினிசாவை எதிர்கொண்டாலும் உள்ளுர் மீனவர்கள் தொழிலுக்கு செல்லமாட்டார்களென அறிவிக்கப்படடிருந்தது.
மிக மோசமான போரை சந்தித்த தமிழ் மக்கள் மீள்குடியேற்றத்தின்போது எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமலேயே வந்தார்கள். அந்த மக்களுடைய பொருளாதாரத்தை அல்லது வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்டு தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அதற்கு மேலாக சட்டவிரோத தொழில்கள் அத்தனையையும் செய்வதற்கு அவர்களுக்கு பூரணமான அனுமதி கொடுக்கப்பட்டது. தென்னிலங்கை மீனவர்களது ஒரு பகுதியினர் வெளியேற்றம் எந்த இடையூறும் இல்லாமல் தமிழ் மீனவர்கள் தங்கள் சுய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கதன சந்தர்ப்பமாக அமையுமென மீனவ அமைப்புக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
Post a Comment