Header Ads

test

அம்பலமானது இராணுவ ஆணையாளரது கோல்மால்:

இலங்கையில் காணாமற்போனோர் தொடர்பில் இலங்கை அரசு அமைத்துள்ள அலுவலகத்திலுள்ள படை அதிகாரி காணாமல் ஆக்குதலுடன் தொடர்புபட்ட படை அதிகாரிகளது நெருங்கிய சகாவும் அவர்களது பாதுகாவலனாகவும் செயற்பட்டிருந்தவரெனகண்டறியப்பட்டுள்ளது. 

இலங்கையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் ஆராய புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையாளர்களில் ஒருவர் இன அழிப்பு இராணுவத்தில் தலைமை வழக்கறிஞராக இருந்துள்ளார். பாதிக்கப்பட்ட பலர் அவரது காவலில் காணாமல் போயிருந்தார்கள். குறைந்தபட்சம் ஆணையாளர் ஒரு சாட்சியாகவும் இன்னொருபுறம் இராணுவ புலனாய்வாளருமானவரென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் மேஜர் ஜெனரல் மொஹந்தி பீரிஸ் 2007முதல் 2010 வரையில் இலங்கை இராணுவத்திற்கான பிரதான வழக்கறிஞராக (பணிப்பாளர் நாயகம்) நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது வேலையாக குற்றஞ்சுமத்தப்படுகின்ற  படையினரை நீதிமன்றங்களில் தற்காத்து, இராணுவ அதிகாரிகளை பாதுகாத்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களிற்கு பதில் தயாரித்து, விசாரணையின் நீதிமன்றத்தில் இராணுவ தளபதி கருத்துக்களை முன்வைப்பதாகும்.

இந்நிலையிலேயே அவர் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், அவர் காணாமற்போன நபர்களின் புதிய அலுவலகத்தில் ஒரு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

2009 மே 18 ஆம் திகதி இராணுவ காவலில் யுத்தத்தின் முடிவில் நூற்றுக்கணக்கானவர்கள் சரணடைந்த வழக்கில் மேஜர் ஜெனரல் மொஹந்தி பீரிஸ் இராணுவத்திற்கு ஒரு சாட்சியாக, அதன் முன்னாள் வழக்கறிஞராக,இருந்துள்ளார். இந்த விவகாரம் முன்னர் இராணுவத்தால் விசாரணை செய்யப்பட்டதா என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். உண்மையில் 58 ஆவது படைப்பிரிவினரிடம் சரணடைந்தோர் பட்டியல் தரவு இருப்பதைப் பற்றிய முக்கியமான தகவல்கள் அவரிடம் இருந்தன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அவர் ஒரு ஆணையாளராக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளார்.

மேஜர் ஜெனரல் மொஹந்தி பீரிஸ் இராணுவத்தில் மிக மூத்த வழக்கறிஞராக இருந்தபோது இந்த வழக்குகளை விசாரித்து ஆய்வு செய்தாராவென்ற கேள்வி உள்ளது.இதனால் இது அவருடைய தற்போதைய பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது.

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களிற்கு தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக 2008 ஆம் ஆண்டில்;; வாசிங்டனுக்கு அவரை அனுப்ப முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ச விரும்பினார் என்று விக்கிலீக்ஸின் தொலைதொடர்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. கோத்தாபய ராஜபக்சவிற்காக அமெரிக்கா செல்ல இருந்தாரா என்பதையும், மனித உரிமைகள் மீறல்களை நீதிக்கு கொண்டுவருவதற்கும் என்ன முயற்சிகள் எடுத்தாலும், எந்த நேரத்திலும் காணாமல்போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது பற்றி மொஹந்தி பீரிஸ் சாட்சியமளிக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

No comments