சீனாவிடம் ஒரு மில்லியன் டொலர் கடன்
சீனாவிடம் இருந்து சிறிலங்கா ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
”இந்தக் கடன் தொகையின் முதற் பகுதியான 500 மில்லியன் டொலர் இந்த மாதம் சிறிலங்காவுக்கு கிடைக்கும். எஞ்சிய 500 மில்லியன் டொலர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் கிடைக்கும்.
சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பெறப்படும் இந்தக் கடனை எட்டு ஆண்டுகளில் சிறிலங்கா திருப்பிச் செலுத்த வேண்டும்.
மூன்று ஆண்டு விலக்குக் காலத்துடன் கூடிய இந்தக் கடனுக்கு, 5.25 வீதம் வட்டி செலுத்தப்பட வேண்டும்.
ஏனைய அனைத்துலக கடன் வழங்குனர்களை விட,சீனக் கடன் விதிமுறைகள் மேன்மையாக இருக்கிறது.
மேலதிகமாக, 200 தொடக்கம் 250 மில்லியன் டொலர் வரையான நிதியை சீனாவின் உள்நாட்டு நிதிச் சந்தையில் இருந்து பண்டா பிணைகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment