நாயாற்றில் வாடிகள் எரிந்த உரிமையாளர்களுக்கு உதவிகளை வழங்கியது செஞ்சிலுவைச் சங்கம்
முல்லைத்தீவு, நாயாற்றில் தீயில் எரிந்த வாடிகளின் உரிமையாளர்களான தமிழ் மீனவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் அவசர உதவிகளை நேற்று வழங்கியது. முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள் எரிக்கப்பட்டன. வாடிகளில் இருந்த வலைகள், இயந்திரங்கள் மற்றும் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளும் அந்தத் தீயில் எரிந்து நாசமாகின. இதனால் 50 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட இழப்பு மீனவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
Post a Comment