Header Ads

test

குடாநாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து ஆராய்வு


யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்தும், அவற்றை கட்டுப்படுத்தும் வழி வகைகள் குறித்தும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், பொலிஸாருக்குமி டையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.

மாலை 5.30 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை தைடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக சந்திப்பின் நிறைவில் முதலமைச்சர் கூறுகையில்,

வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து மக்கள் எவரும் முறைப்பாடுகளை தருவதற்கு முன்வருவதில்லை. இந்த சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்குமோ? என தாங்கள் சந்தேகிப்பதாக பொலிஸார் கூறியுள்ளளனர்.

மேலும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்தும் அவர்களுக்கிடையில் இருக்கும் தொடர்புகள் குறித்தும் இன்று எமக்கு தெரியப்படுத்தியிருக்கின்றார்கள். மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கின்றார்கள். அதேபோல் போதை பொருள் பாவனை தொடர்பாக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக அது குறைக்கப்பட்டுள்ளதாவும் கூறியுள்ளார்கள். மேலும் வடக்கில் பாரிய பிரச்சினையாக உள்ள மணல் கடத்தில் தொடர்பாக வீதி சோதனைகள் நடாத்தப்பட்டு அதுவும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள். இதனடிப்படையில் பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைகளால் உண்டாகும் முன்னேற்றங்கள் குறித்து வாரத்திற்கு ஒரு அறிக்கை தருமாறு கேட்டிருக்கின்றேன்.

மேலும் வடமாகாணத்தில் வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெற்றுவரும் நிலையில் ஆராய்தபோது வீதிகளில் பொறுப்பற்ற விதமாக நிறுத்திவைக்கப்படும் வாக னங்கள் தொடர்பாக ஆராய்ந்திருக்கிறோம்.  இதனடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை யுடன் இது தொடர்பாக பேசுவதாகவும், சாரதிகள் ஓய்வில்லாமல் நீண்நேரம் பயணிப்பது தொ டர்பாகவும் ஆராய்வதாகவும் கூறியுள்ளார்கள். எனவே நீண்டதூரம் பயணிகள் சேவையில் ஈடுபடும் வாகனங்களை பதிவு செய்யுமாறும், இரு சாரதிகள் அந்த வாகனங்களில் இருக்கவே ண்டும் என்பதை உறுதி செய்யும்படியும் நான் பொலிஸாரை கேட்டுள்ளேன்.

இதேவேளை குற்றச் செயல்கள் குறித்து தகவல்களை வழங்க மக்கள் அச்சப்படும் நிலையில் மக்களுடைய அச்சத்தை போக்கும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாக மக்கள் தொலைபேசி ஊடாக முறைப்பாடுகளை வழங்கும் வகையில் அவருடைய தொலைபேசி இலக்கம் பொறிக்கப் பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கூறியு ள்ளார். குறிப்பாக வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யார்?  என்பது தொடர்பில் அவர்களுடைய புகைப்படங்களை வழங்கியுள்ளார்கள். மேலும் வாள்வெட்டு குழு இரண்டு இருப்பதாகவும். அந்த இரு குழுக்களுக்கிடையில் இப்போது பிரச்சினைகள் நடப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

மேலும் வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பாகவும் தகவல் வழங்கியு ள்ளதுடன், இந்த விடயத்தில் ஊடகங்கள் இல்லத பொல்லாத விடயங்களை எழுதுவதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக தாம் கருதுகிறோம் என கூறியுள்ளார். மேலும் எனக்கு கிடைத்த விபரங்களை நான் பொலிஸாருக்கு கொடுத்துள்ளேன். அந்த விபரங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என கூறினார்கள். அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்கள் என்றார். இந்த கலந்துரையாடலில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் றொஸான் பெர்னான்டோ, யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்னான்டோ, யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் துசித்த குமார ஆகியோரும் யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments