மியான்மாரில் ரொய்ட்டர்ஸ் ஊடயவியலாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறை!
மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய இரகசியத்தை திருடியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு ஊடகவியலாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மியான்மார் நாட்டின் பாதுகாப்புக்குரிய இரகசியத்தை திருடியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு காவல்துறையினர் குறித்த இரு ஊடகவியலாளர்களையும் கைது செய்தனர்.
ரக்கினே மாநிலத்துக்குட்பட்ட இன் டின் என்னும் கிராமத்தில் சட்டமீறலாக பத்து பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, தங்களை ஓட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்த காவல்துறையினர் சில ஆவணங்களை தங்களிடம் தந்ததாகவும், ஓட்டலை விட்டு வெளியே வந்ததும் நாட்டின் ரகசியத்தை திருடியதாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கைதான நிருபர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைதான நிருபர்கள் மீதான தேசத்துரோக வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி யாங்கூன் நகர நீதிபதி யே ல்வின், குற்றம்சாட்டப்பட்டிள்ள வா லோனே(32), கியாவ் சொய் ஊ(28) ஆகியோர் நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் முக்கிய ரகசியத்தை திருடியுள்ளனர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என உத்தரவிட்டார்.
#Two Reuters journalists # Reuters journalists jailed #Wa Lone #Kyaw Soe Oo #Myanmar

Post a Comment