அரசியல் கைதிகளை சந்தித்த சிங்கள பல்கலை மாணவ சமூகம்!
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கின்ற நிலையில் இன்று ரஜரட்டை பல்கலைக்கழகத்தை சிங்கள மாணவர்கள் அரசியல் கைதிகளினை சந்தித்துள்ளனர்.தமது விடுதலைக்காக குரல் கொடுக்க யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகத்திடம் அரசியல் கைதிகளும்,அவர்களது குடும்பங்களும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே விடுதலை அல்லது புனர்வாழ்வுடன் விடுதலை எனும் அரசியல் கைதிகளது கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், நாளை வெள்ளிக்கிழமை (21) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டமானது, யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து; நிலையத்துக்கு முன்னால்,நடைபெறவுள்ளது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே நாளை மறுதினம் சனிக்கிழமை வவுனியாவிலும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராட்டமொன்றை நடத்தவுள்ளன.
Post a Comment