Header Ads

test

சிறிலங்கா ரஷ்யா இடையே இராணுவ ஒத்துளைப்ப ஒப்பந்தம்


சிறிலங்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில், இராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ரஷ்யாவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் கேணல் ஜெனரல் அலெக்சான்டர் போமினை, கடந்த 3ஆம் நாள் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின், போது, இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன் போதே, சிறிலங்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில், இராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

No comments