சுடரொளியை கைவிட்ட மஹிந்தவின் விசுவாசி?
உள்ளுராட்சி தேர்தர் பிரச்சாரத்திற்காக மஹிந்த தரப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட சுடரொளி தமிழ் பத்திரிகை இழுத்துமூடப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவனிடமிருந்த சுடரொளி பத்திரிகையை தனது பினாமியான வர்த்தகர் ஒருவர் ஊடாக கொள்வனவு செய்திருந்தார்.
எனினும் சுடரொளி பத்திரிகையினை கொண்டு நடத்துவதற்கு மஹிந்த தரப்பு ஆர்வங்கொண்டிராமையால்; தற்போது சுடரொளி பத்திரிகை இழுத்து மூடப்பட்டுள்ளது.இத்துடன் பத்திரிகையை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.
இதனிடையே குறித்த நாளிதழது ஆசிரியரும் மஹிந்தவின் தமிழ் ஊடகங்களிற்கான இணைப்பாளருமான சிவராஜாவின் பொறுப்பின்மையாலேயே சுடரொளி பத்திரிகை முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
சிவராசா மற்றும் சரவணபவனின் உள்நோக்கம் தெரியாமல் அவர்களை நம்பி தமது நிரந்தர வேலைகளையும் விட்டுவிட்டு அதிகளவு ஊதியத்துக்கு ஆசைப்பட்டு சுடரொளியில் இணைந்த பல ஊடகவியலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
Post a Comment