Header Ads

test

சரத்போன்சேகா வடக்கு வருகின்றார்?

வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா, இரண்டு நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு, சனிக்கிழமை (22) வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சரத்பொன்சேகாவின் வடக்கிற்கான முதலாவது பயணம் இதுவாகும்.

இதற்கமைய, சனிக்கிழமை (22) வவுனியாவுக்கும் ஞாயிற்றுக்கிழமை (23) முல்லைத்தீவு மாவட்டத்துக்கும், அமைச்சர் விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, அரச அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ள அமைச்சர், யானை வேலி அமைப்பது தொடர்பில் பல இடங்களைச் சென்று பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments