இந்தியா உள்ளே:சீனா வெளியே?
வடக்கு,மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி பணிகளை இந்தியா நிறுவனங்களுக்கு வழங்க அரசு தீர்மானித்துள்ளது. வலய மற்றும் பூகோள அரசியலைக் கருத்தில் கொண்டு சீனாவின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீதிகளின் அபிவிருத்தி பணிகளை இந்திய நிறுவனங்களுக்கு வழங்க அரசு எதிர்பார்த்துள்ளதாக சண்டேரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி 100 வீத நிதி சலுகையுடன் சர்வதேச போட்டி விலைமனுவைகோருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு கிழக்கு வீதி அபிவிருத்தி பணிகளை 6 திட்டங்களின் கீழ் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதற்காக தற்போது 44 பிரேரணைகள் கிடைத்துள்ளதாகவும் அவை அமைச்சரவையின் மீளாய்வுக்குழுவுக்கும் திட்டக்குழுவினால் தொழில்நுட்ப மற்றும் நிதி விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகவும் சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இரண்டு தொகுப்புக்கள் சினோ ஹைரோ Sinohydro Corporation Ltd கூட்டுத்தாபனத்துக்கும் மற்றைய தொகுப்புக்கள் CEC-NEM Joint Venture கூட்டு நிறுவனங்களுக்கும் KDA Weerasinghe & Co Pvt Ltd,உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை வடக்கு கிழக்கின் வீதி அபிவிருத்தி பணிகளை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குமாறு அதற்கான நிதி உதவியினை இந்தியாவின் எக்ஸிம் Exim Bank of India வங்கியூடாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் இந்தியாவின் அதிகாரிகள் அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் அடுத்த செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவுள்ளதாக சண்டேரைம்ஸ் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான இர்கொன் IRCON என்ற நிறுவனமும் இந்தியாவின் அதே அரை அரச நிறுவனமான IL&FS Transportation Networks Ltd வசதிகளை செய்து கொடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் அண்மைக்காலமாக வடமாகாணத்தில் சீனாவின் நிறுவனங்கள் முன்னெடுக்கும் நிர்மானப்பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் . இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைத்தால் சினோ ஹைரோ Sinohydro Corporation Ltd நிறுவனம் தொடர்ந்தும் வடமாகாணத்தில் வீதி அபிவிருத்தி பணிகளில் முன்னெடுக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகளின் உறவுகளை அடிப்படையாக வைத்து இது குறித்து தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என இந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய RDA வீதிகளுக்கான நிர்மானப்பணிகளுக்கு திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமன்னரிலிருந்து திருகோணமலை வவுனியா ஊடாக (208.6 கி.மீ) வழியாகவும், யாழ்ப்பாணம் - திருகோணமலை வீதியில் இரண்டு வழித்தடங்கள் திட்டங்கள் (196 கி.மீ. பரந்தன்-முல்லைத்தீவு வீதி ஊடாக கொக்குளாய் பாலம் வழியாகவோ அல்லது (220.36 கிமீ ) தொலைவில் கொக்குளாய் பாலம் ஊடாக பருத்தித்துறை-மருதங்கேணியூடகவும் உள்ளது. இவற்றிக்கு இந்தியாவின் எக்ஸிம் Exim Bank of India,” வங்கியூடாக நிதியளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. எனவும் சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment