Header Ads

test

அரசியல் கைதிகளில் இருவர் வைத்தியசாலையில்?

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவரது உடல்நிலைமோசமடைந்துள்ளது.
அவர்கள் இருவரும்  அனுராதபுரம் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த சூரியகாந்தி ஜெயச்சந்திரன் மற்றும் சுன்னாகத்தை சேர்ந்தஇராசபல்லவன் தபோரூபன் ஆகிய இருவருமே உடல்நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஏனைய அரசியல் கைதிகளது உடல்நிலையும் மோசமடைந்து வருவதாக சிறைச்சாலை வைத்தியர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் ஈபிஆர்எல்எவ் சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் அனுராதபுரம் சிறைக்கு விஜயம் செய்து போராட்டத்திலீடுபட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.  

No comments