Header Ads

test

இந்தியாவிற்கு படையெடுக்கும் வடமாகாணசபை?


வடமாகாணசபை அடுத்து மாதத்துடன் கலைக்கப்படவுள்ள நிலையில் 15 மக்கள் பிரதிநிதிகளிற்கு இந்திய அரசு சுற்றுலா வழங்கியுள்ளது.எனினும் இவர்கள் 15பேரும் ஹைதராபாத்தில் 5 தினங்களிற்கு நடைபெறவுள்ள பயிற்சி பட்டறையில் பங்கெடுக்க நேற்று புறப்பட்டு சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

ஹைதராபாத் அனுபவங்களை வடமாகாணத்தில் புகுத்துவதென்ற தொனிப்பொருளில் பயிற்சிப்பட்டறைகளை நடத்த இவர்கள் 15பேரும் அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுடன் வடமாகாணசபை அதிகாரிகளும் அங்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கட்சிகளது தலைவர்கள் டெல்லிக்கு விஜயம் செய்துள்ள நிலையில் தற்போது வடமாகாணசபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இவ்வாறாக வடமாகாண அரசியல்வாதிகள்,அதிகாரிகள் என பலரும் இவ்வாறாக படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments