போராட்டத்தில் இணைகின்றனர் மகசீன் கைதிகளும்!
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 12 பேரினதும் போராட்டம் தொடர்கின்ற நிலையில் அவர்களிற்கு ஆதரவாக மேலும் 42 அரசியல் கைதிகள் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் நாளை புதன்கிழமை முதல் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.
அவர்களும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதனிடையே அரசியல் கைதிகளது விடுதலையை திட்டுமிட்டு இழுத்தடிக்கின்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் விதமாக எம்.ஏ.சுமந்திரன் இன்றைய சந்திப்பில் பங்கெடுத்துள்ளதாக அரசியல் கைதிகளது குடும்பங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.
அரசியல் கைதிகளது விடுதலையை தடுக்கும் வகையில் வழக்குகளை நீதிமன்றங்களிற்கு மாற்றம் செய்வதும் முன்னிலையாகாது இழுத்தடிப்பதுமே சட்டமாஅதிபர் திணைக்களத்தின் முதன்மையான செயற்பாடாக உள்ளது.அதிலும் போராட்டத்திலீடுபட்டுள்ள அரசியல் கைதிகளது வழக்குகளை அனுராதபுரம் மேல்நீதிமன்றிற்கு மாற்றியதும் அதனையடுத்து அவர்களது போராட்டத்தையடுத்து மீள வவுனியாவிற்கு மாற்றம் செய்வதிலும் சட்டமா அதிபர் திணைக்களமே ஈடுபட்டது.
தற்போது அவர்களை பழிவாங்கும் வகையில் விசாரணைகளிற்கு முன்னிலையாகாது இழுத்தடித்து வருகின்றது.
இந்நிலையில் அவற்றினையெல்லாம் காரணமாக்கி சட்டமா அதிபர் இன்றைய தினம் சுமந்திரனுடனான சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
அதே போன்று வழக்கு விசாரணைகள் இழுபறிப்பட்டு செல்கின்ற நிலையில் அதற்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் பின்னம் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகள் அரசியல் கைதிகளது போராட்டத்தை சுமந்திரன் அடைவ வைத்துவிட்டாராவென்ற சந்தேகத்தை போராட்டகாரர்களிடையே தோற்றுவித்துள்ளது.
Post a Comment