Header Ads

test

கூட்டமைப்பு மௌனமானது ஏன்?


பெருங்கொலைகளை செய்தவர்களை விடுதலை செய்யக்கோருவது தொடர்பில் வெட்கப்படவில்லையாவென இனஅழிப்பு பங்காளி அரசு கேள்வி எழுப்பிய போது அதற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திரமான பதிலை வழங்காது மௌனம் காத்தமை வேதனைக்குரியதென அரசியல் கைதிகளின் குடும்பங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. 

பெரும்பாலும் சித்திரவதைகளின் மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கொலைகள் புரிந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதி அமைச்சரோ அரசியல் கைதிகளை கொலையாளிகள் என முதலிலேயே தீர்ப்பு வழங்க முற்பட்டுள்ளார்.இதனை வேடிக்கை பார்க்கவா கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருந்தார்களென அரசியல்கைதிகளின் குடும்பங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
  
இதனிடையே தமிழராக இருப்பதால் தான் தங்களை விடுதலை செய்யவில்லையா என தமிழ் அரசியல் கைதிகள் நியாயபூர்வமாக கேள்வி எழுப்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளமை யதார்த்தமானதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது, “பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரில் சிலர் வழக்கு தொடரும் வரை, தண்டனை காலத்திற்கு மேலான காலத்திற்கு சிறையிலுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்காமல், விடுதலை செய்ய அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று தீர்மானித்த பின்னர் ஏன் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏனைய கைதிகளையும் விடுதலை செய்ய முடியாது?

நீதி அமைச்சரை போல், மண்டேலா சிறையிலிருந்த போது தென்னாபிரிக்க அரசாங்கம் அரசியல் கைதிகள் இல்லை என கூறியது. மண்டேலாவை போல இந்த கைதிகளும் ஒரு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டனர், ஆனால் அவர்களும் ஒரு அரசியல் நோக்கோடு தான் செயற்பட்டனர்.

இலங்கையில் அரசியல் கைதிகள் முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழராக இருப்பதால் தான் தங்களை விடுதலை செய்யவில்லையா என இந்த கைதிகள் நியாயபூர்வமாக கேள்வி எழுப்புகின்றனர்” என சுமந்திரன் கூறியிருந்தார்.

No comments