தோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ?
ரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை வரவுள்ளது.இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்கான முயற்சியொன்று எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்கு, தமக்கு வாய்ப்பளிக்குமாறு, இந்திய பாதுகாப்புப் பிரிவினர், இலங்கை அரசாங்கத்திடம், விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக, இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரிடம், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில், ஜனாதிபதிச் செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் மற்றும் அவருடைய அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்புக்களை நடத்தவுள்ள நிலையில் றோவின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது றோவின் கொலை முயற்சி பின்னணி குறித்து ஆராய்ந்துவரும் இலங்கை தேசிய புலனாய்வு பிரிவு முன்னாள் துணை இராணுவக்குழுவொன்றின் உறுப்பினர்கள் சிலருக்கும் இச்சதி முயற்சியில் தொடர்பிருப்பதை கண்டறிந்துள்ளதாக தென்னிலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment