பொதுஜன பெரமுனவின் தலைமை மஹிந்தவிடம்?
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றால் பாராளுமன்ற மற்றும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதே மத்திய செயற்குழுவின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, எவ்வாறிருப்பினும் மஹிந்த சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்பட மாட்டார் என்ற அதீத நம்பிக்கை உள்ளதாவும் குறிப்பிட்டார்.
மேலும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை குழப்புவதற்கு பொதுஎதிரணியினர் பல்வேறு வகையிலும் நடவக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையிலேயே பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை மஹிந்த ராஜபக்ஷ ஏற்பார் என தெரிவித்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment