பின்வாங்கியது சிறிலங்கா இராணுவம்!
மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் 200 சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றும், லெப்.கேணல் கலன அமுனுபுரவை, ஐ.நாவின் கோரிக்கையை ஏற்று திருப்பி அழைத்துக் கொள்வதாக, சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், லெப்.கேணல் கலன அமுனுபுரவை உடனடியாகத் திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா செயலகம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியிருந்தது.
“ஐ.நாவின் ஆலோசனைக்கு அமைய, ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் சிறிலங்கா படையினரை சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து, மனித உரிமை ஆய்வுக்குட்படுத்தும், செயல்முறை 2017 ஆம் ஆண்டு, .ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, 2016இல், லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலிக்கு அனுப்ப ஐ.நா இணங்கியிருந்தது.
நான்கு இராணுவ அதிகாரிகளின் பட்டியலில் இருந்து, ஏனைய மூவரையும் நீக்கி விட்டு, ஐ.நாவே லெப்.கேணல் கலன அமுனுபுரவை தெரிவு செய்திருந்தது.
இவரைத் திருப்பி அழைத்துக் கொள்ளும் விடயத்தில், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.” என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
Post a Comment