Header Ads

test

மைத்தரி-ரணில் சமரசத்திற்கு மனோ அழைப்பு!


ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்நிலையை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு நாட்டின் இரு தலைவர்களுக்கும் தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.
தலைவர்களிடையே காணப்படும் இணக்கப்பாடு இன்மை காரணமாக மக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இந்த அதிருப்தி மக்களை தவறான திசையின் பக்கம் வழி நடாத்துகின்றது.
இந்த நல்லாட்சி அரசாங்கம் வந்ததன் பின்னர் நாட்டில் ஜனநாயகம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தை விடவும் மக்கள் நிம்மதியை உணர்கின்றனர். இதனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் தொடர வேண்டும் என நாம் விரும்புகின்றோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments