Header Ads

test

மீண்டும் வைத்தியசாலையில் அரசியல் கைதிகள்?



தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்ற நிலையில் மீண்டுமொரு அரசியல் கைதி மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இலங்கை அரசு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதாக அறிவித்திருந்த இரு அரசியல் கைதிகளுள் ஒருவரான சிவப்பிரகாசம் சிவசீலன் என்பவரே சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனிடையே அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைய தொடங்கியுள்ளது.அவர்களில் பலருக்கு வைத்தியசிகிச்சைகள் வழங்கப்படவேண்டியிருக்கின்ற போதும் சிறைச்சாலை நிர்வாகம் ஊடகங்களிற்கு செய்தி செல்வதை தடுக்க அவர்களை சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே அனுமதிக்க முற்பட்டுள்ளதாக அங்கு சென்று திரும்பியிருந்த சட்டத்தரணியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.  

இதனிடையே அனுராதபுரம் சிறையில் 12 பேர், வெலிக்கடை சிறையில் 43 பேர், கண்டி தும்பர சிறையில் 10 பேருமாக மொத்தம் 65,பேர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments